ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்கள்
Paper –III LEARNING AND TEACHING ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்கள் Faculty Development Programms பணியிடைப் பயிற்சி திட்டங்கள்:- (Inservic Progerammes) பணிபுரியும் போதே தொடர்ந்து கற்றலையும் மேற்கொள்ளாத ஆசிரியர் ஒரு நல்ல ஆசிரியராகத் திகழ முடியாது. ஆசிரியர் பயிற்சி என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் நடைமுறையாகும். ஆசிரியர் தம் வாழ்நாள் இதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தால் மட்டுமே இன்னொரு விளக்கை ஏற்ற முடியும் என கவி இரவீந்திரநாத் தாகூர் குறிப்பிடுகிறார். ஆசிரியர் பயிற்சி கலைத்திட்டம் எத்துணை சிறப்புடையதாக இருந்தாலும் அத்திட்டம் மட்டுமே ஒரு மிகச்சிறந்த ஆசிரியரை உருவாக்க முடியாது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்படும் முன்னேற்றம் காரணமாக அறிவியல் மிகப் பெருத்த வளர்ச்சி அமைந்துள்ளது. அதற்கேற்றவாறு கலைத்திட்டமும் பாடத்திட்டமும் வெகுவேகமாக மாற்றியமைக்கப்படுகின்றன. தொடந்து பணியிடைப் பயிற்சி பெறுவதன் மூலமே ஆசிரியர் தன்னை புதுப்பித்துக் கொள்ள முடி...