ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்கள்

Paper –III

LEARNING AND TEACHING

ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்கள்
Faculty Development Programms

பணியிடைப் பயிற்சி திட்டங்கள்:- (Inservic Progerammes)
     பணிபுரியும் போதே தொடர்ந்து கற்றலையும் மேற்கொள்ளாத ஆசிரியர் ஒரு நல்ல ஆசிரியராகத் திகழ முடியாது. ஆசிரியர் பயிற்சி என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் நடைமுறையாகும். ஆசிரியர் தம் வாழ்நாள் இதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
     ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தால் மட்டுமே இன்னொரு விளக்கை ஏற்ற முடியும் என கவி இரவீந்திரநாத் தாகூர் குறிப்பிடுகிறார். ஆசிரியர் பயிற்சி கலைத்திட்டம் எத்துணை சிறப்புடையதாக இருந்தாலும் அத்திட்டம் மட்டுமே ஒரு மிகச்சிறந்த ஆசிரியரை உருவாக்க முடியாது.
     அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் ஏற்படும் முன்னேற்றம் காரணமாக அறிவியல் மிகப் பெருத்த வளர்ச்சி அமைந்துள்ளது. அதற்கேற்றவாறு கலைத்திட்டமும் பாடத்திட்டமும் வெகுவேகமாக மாற்றியமைக்கப்படுகின்றன. தொடந்து பணியிடைப்  பயிற்சி பெறுவதன் மூலமே ஆசிரியர் தன்னை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

a)      கருத்தரங்கம்: (Seminar)
இதில் பல்வேறு முக்கிய தலைப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, வல்லுனர்கள் உதவியுடன் ஆராய்ந்து உரிய முடிவுகள் எட்டப்படுகின்றன.

b)      புத்தகப் பயிற்சி: (Refresher Course)
ஆசிரியர்கள் தாம் ஏற்கனவே கற்றறிந்த பாடப்பொருள் மற்றும் பயிற்சி நுட்பங்கள் குறித்து புத்தொளி (Refreshing) பெறும் வகையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக அமைக்கப்படும் பயிற்சித் திட்டமே புத்தகப் பயிற்சி என்றழைக்கப்படுகிறது.
     பணிபுரியும் ஆசிரியர்கள் தாம் கற்றறிந்தவற்றோடு தத்தம் துறைகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கருத்துக்கள் மற்றும் நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ள இத்தகைய புத்தாக்கப் பயிற்சிகள் உதவுகின்றன. NCERT -இன் கல்விக் கொள்கை அனைத்து பிரிவு ஆசிரியர்களும் இரண்டு பங்குபெறும் வகையில் ஆண்டு முழுவதும் தொடர்ந்து புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்துகிறது.   

c. பயிலரங்கம்: (Work shop)
பயிலரங்கங்களில் பங்கு பெறுவோர் நேரடி செய்முறை பயிற்சி மூலம் புதிய கற்றல் பொருட்களைப் (New learning materials) படைத்திருக்கின்றனர்.பயிலரங்கங்கள் அமைப்பதற்கு அதிக பொருள் மற்றும் காலச் செலவு ஏற்படுகிறது.

d. கலந்தாய்வு கூட்டங்கள்: (Conferences)
ஒரு கருத்து அல்லது தலைப்பினை ஒட்டி பல்வேறு அம்சங்கள் விவாதத்திற்கு தரப்பட்டு ஒவ்வோர் ஆசிரியர் குழுவும் தத்தம் ஆர்வத்திற்கேற்ப குறிப்பிட்ட துணை தலைப்புகளில் தமது கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றனர். கலந்தாய்வின் முடிவில் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு கையேடு வடிவில் வெளியிடப்படுகிறது.

e. கல்வி மையங்கள்: (Study Centres)
கல்வியியல் கல்லூரிகள் அவற்றின் விரிவாக்கத் துறைகள் போன்றவை இத்தகைய கல்வி மையங்களை அமைத்திட பெரும் பங்காற்றலாம். NCER-T- இன் வெளியீடுகள் பல்வேறு கல்வி மையங்கள் வெளியிட்டுள்ள புத்தகங்கள் போன்றவற்றை இத்தகைய கல்வி மையங்கள் தருவித்து பணிபுரியும் ஆசிரியர்கள் பார்வையிட உதவினால் ஆசிரியர்கள் தமது பணித்திறனை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள மிகவும் உதவிடும்.

அஞ்சல் வழி படிப்புகள்: (Correspondence course)
அஞ்சல்வழிக் கல்வி வாயிலாக பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் பணியிடைப் பயிற்சி வழங்கலாம். உதாரணமாக ஹைதராபாத்திலுள்ள ஆங்கிலம் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளுக்கான மத்திய ஆய்வு மையம் (Central Institute of English and Foreign Languages) அஞ்சல் வழிப் படிப்பு மூலமாக ஆங்கிலத்தில் முதுகலை சான்றிதழ் பட்டங்களுக்கான பயிற்சியையும் சான்றிதழ் படிப்புக்கான பயிற்சியையும் அளிக்கிறது.

பணியிடைப் பயிற்சிகளை வழங்கிடும் நிறுவனங்கள்:
1. ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியை வழங்கிடுவதற்கான விரிவாக்கத் துறைகளைக் கொண்டுள்ள கல்வியியல் கல்லூரிகள்
2.       மாநிலக் கல்வியியல் நிறுவனம்
3.       மாநிலக் அறிவியல் கல்வி நிறுவனம்
4.       மாநிலக் ஆங்கில கல்வி நிறுவனம்
5.       மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
மாநில அளவில் இயங்கும் ஆசிரியப் பணியாளர்கள் கல்லுரி தற்போது இது மனிதவள மேம்பாட்டு மையம் என்று அழைக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கலைத்திட்ட ஒருங்கிணைப்பின் தேவை

மொழியின் கல்வி தாக்கங்கள்

பன்முக கலாசார வாதம்