கலைத்திட்ட ஒருங்கிணைப்பின் தேவை
Paper – V
UNDERSTANDING DISCIPLINES AND SUBJECT
UNDERSTANDING DISCIPLINES AND SUBJECT
கலைத்திட்ட ஒருங்கிணைப்பின் தேவை
கலைத்திட்ட ஒருங்கிணைப்பின் தேவைகள்:
கலைத்திட்டதில்
பல்வேறு பாடங்கள் பாடப்பகுதிகள்/தலைப்புகள் கல்விசார் அனுபவங்கள் ஆகியவற்றை
தனித்தனியே சேர்ப்பதன் மூலம் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை களைந்திடுவதற்காக
ஏற்பட்டதே “கலைத்திட்ட ஒருங்கிணைப்பு”ஆகும். கலைத்திட்ட ஒருங்கிணைப்பு பல்வேறு
வடிவங்களையும் வழிமுறைகளையும் கொண்டிருக்கக்கூடும். பொதுவாக ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட பாடங்களை இணைத்து பொருளுடைய விரிவான கற்றல் புலத்தை உருவாக்கி அதில்
இடம்பெறும் அனைத்து கற்றல் அனுபவங்களையும் நன்கு ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு
வழங்கிட முடியும். அண்மைக் காலங்களில் கலைத்திட்ட ஒருங்கிணைப்பில் அதிக கவனம்
செலுத்தப்பட்டுவருகிறது. இதற்கான காரணங்கள் வருமாறு
விரைவான அறிவுப் பெருக்கம்:
கற்றல் புலன்கள்
அனைத்திலும் கடந்த நூற்றண்டு முதல் விரைவான அறிவுப் பெருக்கம் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பாடத்துறையின் குறிப்பிட்ட பகுதிகளில் சிறப்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு
அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்தல் நிகழ்கிறது. ஒரு பாடப்பகுதி தனித்தன்மையுடனும்
திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட எல்லைகளையும் கொண்டு விளங்கும்போது அது தனிப்பாட
துறையாக உருவெடுக்கிறது.இவ்வாறு புதுப்புது சிறப்பு பாடத் துறைகள் தோன்றிய வண்ணம்
உள்ளன. இவை யாவற்றையும் பள்ளிக் கலைத்திட்டத்தில் சேர்த்தல் இயலாத காரியம் ஆகும்.
ஆகவே கலைத்திட்டத்தில் எப்பாடத்துறைகளைச் சேர்ந்த பாடப் பகுதிகளை நீடிக்கச்
செய்தல் எவற்றை நீக்குதல், எவற்றை புதிதாகச் சேர்த்தல் என்பதை கலைத்திட்டத்தை
உருவாக்குபவர்கள் அவ்வப்போது முடிவு செய்து கலைத்திட்டத்தை தொடர்ந்து
மாற்றியமைத்தல் அவசியமாகிறது.இவ்வாறு தெரிவு செய்யப்படும் பாடப்பகுதிகளை
பொருத்தமான வழிமுறைகளில் இணைத்து கலைத்திட்ட ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ளுதல்
இன்று இன்றியமையாத் தேவையாக உள்ளது.
சமூகத்தில் தோன்றிடும் புதிய பிரச்சினைகளுக்கு
ஈடுகொடுத்தல்:
சமூகத்தில்
புதுப்புது பிரச்சனைகள் தோன்றி அவற்றிக்கு தீர்வு காணவேண்டியிருப்பதால் கலைத்திட்ட
உள்ளடக்கத்தை அவ்வப்போது மாற்றியமைத்திடும் தேவை ஏற்படுகிறது. உதாரணமாக
அண்மைக்காலத்தில் ‘எய்ட்ஸ்’ (AIDS) என்னும் உயிர்கொல்லி நோய், இளைஞர்களிடேயே போதைப்பொருள்
பழக்கம், பாலியல் துன்புறுத்தல்கள் போன்றவை குறித்து சமூகத்தில் அதிக
விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டியுள்ளது. எனவே இவற்றை கலைத்திட்டதில் சேர்க்க
வேண்டியது அவசியமாகிறது. ஆனால் இவ்வாறு புதுப்புது பாடதலைப்புகளை சேர்த்திடல்
பள்ளிப்பாடத் திட்டத்தின் (School Academic Schedule) சுமையை அதிகரிக்கிறது. அனால்
பள்ளி வேலை நாட்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வருடத்திற்கு 220 என்ற நிலையிலே
உள்ளது. எனவே புதுப்பாடத்தலைப்புகளை சேர்த்தலும் கலைத்திட்ட சுமையை அதிகரிக்காமல்
இருக்க பாட ஒருங்கிணைப்பினை மேற்கொள்ளுவது இன்றியமையாததாகிறது.
முடிவுரை:
இத்தகைய
கலைத்திட்டத்திற்கு பெருகிவரும் விரிகள கலைத்திட்டம் என்பதன் கருத்து விளக்கம்,
கலைத்திட்ட ஒருங்கிணைப்பின் தேவை தேசிய முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலான
அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் கலைத்திட்ட உள்ளடக்கத்தைத் தேர்வு செய்தலில்
உள்ள பிரச்சனைகளும் தீர்வும் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment