பன்முக கலாசார வாதம்
Paper – I
Knowledge and Curriculum
Multiculturalism
பன்முக கலாசார வாதம்
பல நாடுகளில் பிற
நாட்டினர், சமயத்தினர், மொழியினர் ஆகியோரது குடியேற்றம் காரணமாகவும் வெளிநாடுகளோடு
கொண்டுள்ள வாணிப மற்றும் கலைகளின் தொடர்பு காரணமாகவும் பல பண்பாடுகள் இணைந்து பல
வண்ண பூக்களாக மாறி வருகின்றன.
பெரும்பாலான மாநிலங்களில்
மொழி கலாச்சாரம் உணவு உடை இலக்கிய நடை கட்டிடக்கலை இசை மற்றும் விழாக்களில்
ஒருவரிடம் இருந்து ஒருவர் மாறுபடுகின்றனர்.
பன்முக கலாசாரத்தில்
இவ்வாறு பல வேறுபட்ட கலாச்சாரங்களின் தொகுப்புகள் மிகவும் ஒருமைப்பாட்டினை
வெளிக்கொணரும்.
பன்முகம் என்ற பெயரில்
மக்கள் தங்கள் சொந்த கலாச்சாரத்தினை மதிக்காமல் அவற்றினை அழித்து விடும் அபாயம்
உள்ளதாக பலர் கருதுகிறார்கள்.
பன்முக கலாச்சாரத்தில் உள்ள
கொள்கைகள் அனைவருக்கும் பொருந்தும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது.
பன்முக கலாச்சாரம் நாட்டில்
வேறுபட்ட மக்களை உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலும் அனைத்து மக்களும்
ஒருவருக்கொருவர் அன்பும் அமைதியும் கொண்டு நட்புறவு பாராட்ட செய்வதற்காக தோன்றியதே
இந்த பன்முக கலாசார வாதம் ஆகும். இதை நாட்டு மக்கள் அனைவரும் சரியான முறையில் பயன்
படுத்திக் கொண்டால் உலகம் முழுவதும் அமைதியும் சந்தோசமும் நிலவும் என்பதில்
சிறிதும் ஐயம் இல்லை.. கல்வியில் பன்முக கலாச்சாரவாதம் எந்த ஒரு செயலையும்
மக்களிடையே முழுமையாக கொண்டு சேர்ப்பதற்கு நமக்கு மிக சிறந்த கருவியாக செயல்படுவது
கல்வியாகும்.
Comments
Post a Comment