கல்வியில் நிதி அமைப்பு
Paper II
Contemporary India and Education
கல்வியில் நிதி அமைப்பு
Funding systems of Education
கல்வியில் நிதி அமைப்பு :-
கல்வி
வளர்ச்சியில் அரசின் பொறுப்பு சுதந்திர இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதற்கு
மூன்று சிறப்பான காரணங்கள் உள்ளன.
1.
நாடு விடுதலையடைந்த பின் கல்விக்கான தேவை
பெருகியுள்ளது.
2.
அரசு கல்வித்தரத்தை உயர்த்த முயற்சித்து
வருகிறது.
3.
கல்வியறிவும், திறன்களும் உள்ள மனித சக்தி
நாட்டின் பொருளாதார வளர்ச்சித் தேவைப்படுகிறது.
1947 -ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு
தமிழ் நாட்டில் பெரிய அளவில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டது. கல்விக்கான செலவுத் தொகை
பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து சீராக உயர்ந்து கொண்டே வந்துள்ளது. சிறப்பாக
பள்ளிக் கல்விக்கான செலவினத் தொகை ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில்
குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கின்றது. 1951-52 –ல் பள்ளிக் கல்விக்கான செலவுத் தொகை ரூ 12 கோடியாக இருந்தது. இது 1977-78 –ல் ரூ 134.48 கோடியாக உயர்ந்தது.
இத்தொகை 1978-79 -ல் ரூ. 141 கோடியாக மேலும் உயர்ந்தது.
தமிழ்நாட்டில் 1977-78 –ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் கல்வியின்
பல்வேறு துறைகளின் கல்வி வளர்ச்சிக்கான மொத்த செலவு சுமார் ரூ. 201 கோடியாக இருந்தது. 1978-79 –ம் ஆண்டுக்கான
வரவு-செலவுத் திட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கான மொத்த செலவு சுமார் ரூ. 222 கோடியாக இருக்கும். அரசினர் தமது மொத்த
வருவாய்க் கணக்கில் தோராயமாக 25 விழுக்காட்டினைக்
கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றனர். கல்வி வளர்ச்சியில் அரசினர்
கொண்டுள்ள ஆர்வத்தினையே இந்நிதி ஒதுக்கீடு எடுத்துக்காட்டுகிறது.
1956 -ம் ஆண்டு மாநிலச் சீரமைப்புக்குப்பின் தமிழ்நாட்டில்
கல்வித்துறையில் கடந்த இருபது ஆண்டுகளில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 1957 –ல் மாநில அளவில் கல்விக் கணக்கெடுப்பு
மதிப்பீட்டின் பிறகு அப்போதுள்ள வசதிகள், கல்வித்தேவைகள் நிர்ணயிக்கப்பட்டு
அதன்பின் வந்த ஆண்டுகளில் பள்ளிகள் இல்லாத இடங்களில் மாணவர்களுக்கு ஒரு மைல் சுற்றளவுக்குள்
தொடக்கக்கல்வியும் மைல் சுற்றளவுக்குள் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் கிடைக்க
வேண்டும் என்ற கொள்கையின்படி பள்ளிகள் திறக்கப்பட்டன. தேவையான இடங்களில்
அப்போதிருந்த பள்ளிகளின் நிலை உயர்ந்துள்ளது. முதல் ஊராட்சி ஒன்றியங்கள்
அமைக்கப்பட்டு அவை தொடக்கக் கல்விக்கு முக்கியப் பொறுப்பாக்கப்பட்டன.
பொது மக்களது நிதியுதவி:
தனி மனிதர்களும்,
அறக்கட்டளைகளும், வணிக நிறுவனங்களும் ஏற்பு பெற்ற கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி
நடத்தி வருகின்றன. இது தவிர ஒரு பகுதி மக்கள் தங்கள் பகுதியிலுள்ள கல்வி
நிலையங்களின் வளர்ச்சிக்கான நிலமாகவோ, பொருளாகவோ, பணமாகவோ, கட்டிடங்களாகவோ,
உழைப்பாகவோ உதவி செய்து வருகின்றனர்.
Comments
Post a Comment