இனங்கள் மற்றும் பால்பாகுபாட்டில், ஒரே மாதிரியான பொதுத் தன்மை காணச் செய்தலின் விளைவுகள்
Effects of Media on racial development:
புலன் உறுப்புக்கள் வாயிலாகப் பெற்ற
புலன் உணர்விற்கு நாம் ஏற்கெனவே பெற்றிருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் பொருள்
ஊட்டி, தூண்டல் பொருளின் தன்மையை அறிதலை புலன்காட்சி என்கிறோம்.
புலன் உணர்வைப் பெறும்போது
நம்மிடம் காணப்படும் மனநிலை, ஒரு பொருளை எவ்வாறு காண விரும்புகிறோமோ அப்பொருள்
அவ்வாறே நமக்குக் காட்சியளிக்கிறது. எனவே ஒரே புறப்பொருளை, வெவ்வேறு மனிதர்கள்,
வெவ்வேறு விதமாக உணர்கிறார்கள்.
அவ்வாறில்லாமல், ஒரு பொருளை அல்லது
ஒரு நபரை நாம் அனைவரும் ஒரே மாதிரியாக (Stereotype) உணரச்செய்யும் வலுவான சக்தி ஊடகத்திடம் உள்ளது.
உதாரணமாக, மூக்குக்கண்ணாடி
அணிந்து, குடைபிடித்து, கைப்பையுடன் நடந்து செல்லும் ஒரு பெண்ணின் தோற்றத்தைப் பார்த்தவுடன்,
அவர் ஒரு ஆசிரியை என்ற மனநிலை அனைவருக்கும் ஒரே மாதிரியாகத் (Stereotype) தோன்றும்.
அதற்குக்காரணம் தொலைக்காட்சிகளில்
பத்திரிகைகளில் ‘ஆசிரியை’ என்பவருக்கு அம்மாதிரியான உருவம் தந்து
பொதுமைப்படுத்தியிருப்பதே ஆகும்.
பொதுவாரியான ஊடகங்கள்,
நவீனயுகத்தில் தகவல்களை பரப்புவதில் முக்கிய இடம் பிடிக்கிற்றன. குறிப்பிட்ட
வகையான தகவல்களின் ஒலி, ஒளிபரப்பு மக்களின் மனப்பான்மைகளையும், எண்ணங்களையும்
மாற்றுகிறது. குறிப்பாக ஒரே மாதிரியான மனப்பான்மையின் பால் இணங்க வைக்கிறது.
உதாரணமாக, கிறிஸ்தவப்
பாதிரியார்கள் எனில், நீள அங்கி அணிந்தவர்களாகவும், பொறுமைக்கு இலக்கணமானவர்களாகவும்
சித்தரிக்கப்பட்டு, மக்கள் அந்த மனப்பான்மையிலேயே நிலை நிறுத்தச் செய்தல்.
பெண் என்றாலே கவர்ச்சி மற்றும்
வசீகரிக்ககூடிய தன்மை பெற்றவளாகவும், ஊடகங்களில் சித்தரிக்கப்படுதல்.
ஆண் எனில், வலுமிக்கவனாய்,
பொறுப்புடையவனாய் சித்தரிக்கப்படுதல்.
நமது
சமூகத்திலேயே “பெண் பிள்ளையைப்போல் அழாதே” என்ற சொல் வழக்கு உண்டு. இதிலிருந்து
பெண் என்றாலே அதிக உணர்ச்சி வசப்படுபவள் என்ற கருத்து சித்தரிக்கப்பட்டு அதை ஒரே
மாதிரியாக (Stereotype)
ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் தொலைக்காட்சித் தொடர்களில்
பெண்களை அழுபவர்களாகவே விளம்பரப்படுத்துகின்றார்கள்.
Comments
Post a Comment