இடைவினை புரியும் வெண்மைப் பலகை
Paper – VII PEDAGOGY OF PHYSICAL SCIENCE இடைவினை புரியும் வெண்மைப் பலகை Interactive White board நவீன காலத் தொழில் நுட்ப வளர்ச்சியில் ஒரு உயரிய கண்டுபிடிப்பு வெண்மைப் பலகை ஆகும். இதன் மூலம் கல்வியில் கற்றலில் கற்பித்தல் மிகவும் எளிதாகவும் சிறப்பானதாகவும் செயல்பட முடிகிறது. வெண்மைப் பலகையானது கணிப்பொறியுடன் இணைக்கப்பட்டிருக்கும். கணிப்பொறியில் தேவையான பாடத்திட்டங்கள் அனைத்தும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். கணிப்பொறி ------------ தலைமேல் வீழ்த்தி ----------- வெண்திரை முதன் முதலில் வெண்பலகையானது அலுவலகத் தேவைகளுக்காக கண்டுபிடிக்கப்பட்டது. இடைவினை புரியும் வெண்பலகை செயல்படும் விதம் மற்றும் கருவிகள் : வெண்பலகையில் காட்சிகளைத் தோன்றச் செய்ய கணிப்பொறியுடன் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றின் மூலம் இணைத்து செயல்படுத்தலாம். கம்பிவடங்கள் (cable) மூலம் (USB/ Serial Port) கம்பிவடங்கள் அல்லாத முறையில் (Wireless) ப்ளூடூத் வழியாக இணைத்தல். கருவிகள்: வெண்பலகையுடன் இணைக்கப்பட்டுள்ள முக்கியமான கருவிகள் பின்வருமாறு 1...