“தான்” என்பது குறித்த உடன்பாட்டு கற்பிதங்கள்

Paper – VI
GENDER SCHOOL AND SOCIETY

POSITIVE NOTIONS ABOUT THE SELF

“தான்” என்பது குறித்த உடன்பாட்டு கற்பிதங்கள்


முன்னுரை:

இவ்வுலகினில் பொதுமக்களுக்கான செய்திப் பரப்பு ஊடகங்கள், பாலினங்கள் குறித்து எத்தகைய பார்வையை ஏற்படுத்துகின்றன. பெண்கள் மற்றும் ஆண்களையும் அவர்களது பாலின பங்கு பணிகளையும் எவ்வாறு சித்தரிக்கின்றன. மொழிப் பயன்பாட்டில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்திடும் முறை பாலினசார்பு இயல்புகள் பற்றி பொதுமக்கள், பொதுமக்களுக்கான செய்தி பரப்பு ஊடகங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள், தொலைக்காட்சி நிகழ்சிகள், கேலிச்சித்திரங்கள் (Cartoons) திரைப்படங்கள் (Movies) விளம்பரங்கள் போன்ற வெகுஜன ஊடகங்கள் பெண்களையும், ஆண்களையும் சித்தரிக்கும் முறை பொதுமக்களுக்கான செய்திப் பரப்பு ஊடகங்களில் பாலின பங்கு பணிகளாக வர்ணிக்கப்படுபவை. உடல் மற்றும் “தான்” எனபது பற்றிய உடன்பாட்டு கற்பிதங்கள் ஆகியவை குறித்து ஆராய இருக்கிறோம்.


“தான்” என்பதன் விளக்கம் (Concept of the Self):

ஒருவன் தனது எண்ணங்கள், ஆற்றல்கள், திறன்கள், செயல்படும் திறன், சமூகவியல்புகள் போன்றவை குறித்து அகநோக்குடன் கூடிய சுயமதிப்பீட்டின் மூலம் தன்னைப் பற்றி கொண்டிருக்கும் உருவகமே (Self Image) “தான்” (Self) ஆகும்.
சமூகவியலாளர், பிறக்கும் குழந்தைக்கு “தான்” என்பது தோன்றுவது இல்லை எனவும், அக்குழந்தை வளர வளர சமூக அமைப்பின் பல்வேறு உட்கூறுகளோடு இடைவினைகள் ஆற்றிடுவதன் மூலம் தன்னைப் பற்றிய
உருவகத்தை (மன பிம்பத்தை) எற்படுத்தி கொள்வதாகவும் இதுவே அதன் ‘தன் அடையாளம்’ (self-identity) ஆகும் என்றும் கருதுகின்றனர்.

Comments

Popular posts from this blog

கலைத்திட்ட ஒருங்கிணைப்பின் தேவை

மொழியின் கல்வி தாக்கங்கள்

பன்முக கலாசார வாதம்