இடைவினை புரியும் வெண்மைப் பலகை
Paper
– VII
PEDAGOGY OF
PHYSICAL SCIENCE
இடைவினை புரியும்
வெண்மைப் பலகை
Interactive White board
நவீன
காலத் தொழில் நுட்ப வளர்ச்சியில் ஒரு
உயரிய கண்டுபிடிப்பு வெண்மைப் பலகை ஆகும். இதன் மூலம் கல்வியில் கற்றலில்
கற்பித்தல் மிகவும் எளிதாகவும் சிறப்பானதாகவும் செயல்பட முடிகிறது. வெண்மைப்
பலகையானது கணிப்பொறியுடன் இணைக்கப்பட்டிருக்கும். கணிப்பொறியில் தேவையான
பாடத்திட்டங்கள் அனைத்தும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
கணிப்பொறி ------------ தலைமேல் வீழ்த்தி ----------- வெண்திரை
முதன் முதலில் வெண்பலகையானது அலுவலகத்
தேவைகளுக்காக கண்டுபிடிக்கப்பட்டது.
இடைவினை புரியும்
வெண்பலகை செயல்படும் விதம் மற்றும் கருவிகள்:
வெண்பலகையில்
காட்சிகளைத் தோன்றச் செய்ய கணிப்பொறியுடன் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றின் மூலம்
இணைத்து செயல்படுத்தலாம்.
கம்பிவடங்கள் (cable) மூலம் (USB/ Serial Port)
கம்பிவடங்கள்
அல்லாத முறையில் (Wireless)
ப்ளூடூத் வழியாக
இணைத்தல்.
கருவிகள்:
வெண்பலகையுடன் இணைக்கப்பட்டுள்ள
முக்கியமான கருவிகள் பின்வருமாறு
1.
இணையதள தொடர்புடன் கூடிய கணிணி
2.
எழுத்தாணி (இடைவினை வெண்பலகை பேனா)
3.
ஒலி பெருக்கி (Speaker)
4.
பட வீழ்ச்சி (Projector)
வகுப்பறை பயன்பாடுகள்:
·
கற்றல் கற்பித்தலுக்கு
தேவையான பாடத் திட்டங்கள் அனைத்தையும் முதலில் கணிப்பொறியில் சேமித்து வைத்தல்.
· இணையதள வசதி செய்தல்
அனைத்து பாடங்களுக்கும் தேவையான படத்திட்டங்களை எழுத்து
வடிவிலோ, படங்களாகவோ முன்கூட்டியே கணிப்பொறியில் சேமித்து வைத்தல்.
Comments
Post a Comment