அறிதிறன் மதிப்பீட்டுஅணுகுமுறை
Paper – II
Assessment for Learning
அறிதிறன்
மதிப்பீட்டுஅணுகுமுறை
Assessment in Constructivist Approach
அறிதிறன் மதிப்பீட்டு
அணுகுமுறையில் மாணவர்கள் கற்றல் செயல்பாட்டிற்கும் முந்தைய அறிவிற்கும் அதிக
முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்களால் சுயமாகவே கற்கவும், சிந்திக்கவும்
முடியும் என்று இவ்வணுகுமுறை நம்புகிறது. மாணவர்கள் இவ்வணுகுமுறையில் தனி நபர்களாக
கருதப்பட்டு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
உற்று நோக்கல் மற்றும் குழு
பணி போன்று தனியாள் கற்பிக்கும் முறைகள் ஊக்குவிக்கப்படுகிறது. இம்முறையில்
மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுகின்றனர். ஆசிரியர்கள் அவர்களை வழி
நடத்துகிறார்கள்.
வாய்மொழி உரையாடல்:
ஆசிரியர் மாணவர்களிடம்
பாடம் தொடர்பான கேள்விகளை கேட்டோ அல்லது கலந்துரையாடியோ மறைமுகமாக மாணவர்களை
மதிப்பிடுகிறார்.
தெரிந்த
கருத்துக்களிலிருந்து மாணவர்களின் கற்றலை மதிப்பிடல்:-
இம்முறையில் ஆசிரியர்
குறிப்பிட்ட பாடத்தில் இருந்து ஒரு தலைப்பை மாணவர்களுக்கு வழங்கி அத்தலைப்பு
தொடர்பான அவர்களின் கருத்துக்களை எழுத செய்கிறார். அவர்கள் எழுதியதில் இருந்து
கற்றல் மதிப்பிடப் படுகிறது.
மன வரைப்படம்:
ஆசிரியர் ஒரு தலைப்பினை
வழங்கி அதற்கான மன வரைபடத்தை மாணவர்களிடம் வரைய சொல்கிறார். அதன் மூலம் கற்றல்
மதிப்பிடப்படுகிறது.
மாணவர்களின் பங்களிப்பு:
ஆசிரியர் ஒரு கற்றல்
செயல்பாட்டை வழங்கி மாணவர்களை பங்களிக்க முற்படுகிறார். மாணவர்களின் பங்களிப்பை
பொறுத்து கற்றல் மதிப்பிடப்படுகிறது.
Comments
Post a Comment