பார்வை குறைபாட்டின் வகைகள்
Paper – III
Creating an Inclusive School
பார்வை குறைபாட்டின் வகைகள்
1.
மையோபியா – கிட்டப்பார்வை:
அருகில்
உள்ள பொருட்களை காண முடியும், தூரத்தில் உள்ள பொருட்களை காண இயலாது. கண்ணின் புற
வளைவு பகுதி அதிகரிப்பதாலும் கண் கோளம் நீட்சி அடைவதாலும் இது ஏற்படுகிறது. இதனை
குழி லென்ஸ் மூலம் சரி செய்யலாம்.
2.
ஹைப்பர் மெட்ரோபியா –
தூரப்பார்வை
தூரத்தில்
உள்ள பொருட்களை காண இயலும். அருகில் உள்ள பொருட்களை காண இயலாது. புறவளைவு பகுதி
இல்லாததினால் ஹைப்பர் மெட்ரோபியா ஏற்படுகிறது. இதனை குவிலென்ஸ் மூலம் சரி
செய்யலாம்.
3.
ஆஸ்டிக் மேட்டிசம்
தூரத்தில்
உள்ள பொருட்களை சரியான முறையில் காண இயலாது. இதனை கோள ஆடி மூலம் சரி செய்யலாம்.
4.
பிரஸ் மையோபியா
வயது
முதிர்ச்சியினால் கண்ணின் லென்ஸ் கடினமாவதினாலும் மீள் தன்மை குறைவதினாலும் இது
ஏற்படுகிறது. இதனை குவிலென்ஸ் மூலம் சரி செய்யலாம்.
5.
கிளாக்கோமா
கண்ணில்
உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதினால் பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு கண்ணின்
வட்டுப்பகுதியும் பாதிப்படைகின்றது. இதனால் விழித்திரையில் சிதைவு ஏற்படுகின்றது.
6.
கண்புரை
கண் லென்சில் உள்ள மெல்லிய
புரத இழைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக கண்புரை ஏற்படுகிறது. இதனை அறுவை சிகிட்சை
மூலம் சரி செய்யலாம்.
Comments
Post a Comment