இயக்கத்திற்கான முதல் விதி

Paper – IV

Pedagogy of Physical Science
(Part 2 content mastery)

இயக்கத்திற்கான முதல் விதி:
கலீலியோ சாய்தளத்தில் பொருட்களின் இயக்கத்தை ஆய்வு செய்தார். பொருள்களின் மீது விசை செயல்படாத வரை அவை மாறாத வேகத்தில் இயங்குவதாக கூறினார்.

கலீலியோவின் விசை, இயக்கம் பற்றிய கருத்துக்களை நியூட்டன் ஆராய்ந்து பொருட்களின் இயக்கம் பற்றிய மூன்று விதிகளை வெளியிட்டார். அவை நியூட்டனின் இயக்க விதிகள் எனப்படுகின்றன.

நியூட்டனின் முதல் விதிப்படி, சமமற்ற புரவிசையொன்று செயல்பட்டு மாற்றும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது ஒரே நேர்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்.

இதன் மூலம் எல்லாப் பொருள்களும் தமது இயக்க நிலையில் ஏற்படும் மாற்றத்தை எதிர்க்கும் தன்மை உடையவை எனக் கொள்ளலாம். புற விசைகள் செயல்படாத நிலையில் ஓய்வு நிலையில் உள்ள பொருள் ஓன்று தொடர்ந்து சீராக இயக்க நிலையில் உள்ள பொருள் ஓன்று தொடர்ந்து சீராக இயக்க நிலையிலும் இருக்கும். பொதுவாக பொருளின் இப்பண்பு நிலைமம் எனப்படும். எனவே நியூட்டன் முதல் விதியை நிலைம விதி என்கிறோம்.

மகிழுந்து ஓன்று குறுகிய வளைவில் விரைந்து திரும்பும் போது நாம் ஒரு பக்கமாக சாய்கிறோம். இதற்கான காரணம் நிலைம விதி மூலம் பெறப்படுகிறது. மகிழுந்தின் மீது அதன் இயக்க திசையை மாற்றும் வகையில் எஞ்சிய சமன் செய்யப்படாத விசையைச் செலுத்தும் போது நாம் தொடர்ந்து நேர்க்கோட்டில் இயங்க முயல்வதே இதற்கு காரணம்.`

Comments

Popular posts from this blog

கலைத்திட்ட ஒருங்கிணைப்பின் தேவை

மொழியின் கல்வி தாக்கங்கள்

பன்முக கலாசார வாதம்